மார்ச் 09 : இரு கட்டங்களில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L : 3 3⁄4 மணி நேரம்; P,Q,R,S,T,U,V,W: 3 மணி நேரம் மின்வெட்டு

மார்ச் 09 : இரு கட்டங்களில் A,B,C,D,E,F,G,H,I,J,K,L : 3 3⁄4 மணி நேரம்; P,Q,R,S,T,U,V,W: 3 மணி நேரம் மின்வெட்டு-Power-Shedding-Power-Cut-for-March-09-PUCSL

- மாகாண ரீதியான மின்வெட்டு பிரதேசங்களின் பட்டியல் வெளியீடு

நாளையதினம் (09) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 3⁄4 மணித்தியாலங்களும்:
- மு.ப. 8.00 முதல் பி.ப. 6.00 மணி வரை  2 ½ மணி  நேரம்
- மாலை 6.00 முதல் இரவு 11.00 மணி வரை 1 1⁄4  மணி நேரம்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்களும்:
- மு.ப. 9.00 முதல்  பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்
- பி.ப. 5.00 
முதல் இரவு 9.00 வரை ஒரு மணி நேரம்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதேவேளை மாகாண ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்களின் பட்டியலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்க)

PDF File: 

Add new comment

Or log in with...