ICC தரவரிசையில் பாபர் அசாம் தொடர்ந்தும் முதலிடத்தில்

- இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க 9ஆவது இடத்திற்கு

ICC ரி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ரி20 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம் தொடர்ந்தும் முதல் இடத்திலும், இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு வீரரான மொஹமட் றிஸ்வானும் உள்ளனர்.

மூன்றாம் இடத்தில் எய்டன் மெக்ரம் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

தரவரிசையில் விராட் கோலி பின்னடைவைச் சந்திதுள்ளார்.

இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க 6 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்தை பெற்றுள்ளார். இந்திய அணிக்கு எதிரான ரி20 தொடரின்போது இரண்டாவது போட்டியில் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை ஊடாக அவருக்கு 9ஆவது இடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கை அணியின் தசுன் ஷானக்க 18 இடங்களில் முன்னேறி 46ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை அணிக்கு எதிரான ரி20 தொடரில் தொடர்ச்சியாக 3 சதங்கள் உள்ளடலங்காக 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில், 27 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 18ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

விராட் கோலி 15ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலிலும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முதலிடத்தில் காணப்படுவதோடு, இரண்டாம், மூன்றாம் இடங்களில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கை அணியின் அவிஷ்க பெனாண்டோ 40ஆவது இடத்திலும், சரித் அசலங்க 41ஆவது இடத்திலும், குசல் ஜனித் பெரெரா 45ஆவது இடத்திலும் ஒருநாள் வீரர்களின் பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரி20 பந்துவீச்சாளர் வரிசையில் முதலிடத்தில் இருந்த வணிந்து ஹசரங்க படிப்படியாக தரவரிசையில் சரிவடைந்து 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய தொடரின் போது கொவிட் தொற்றுக்குள்ளான அவர், அதன் பின்னர் இந்தியாவுடன் இடம்பெற்ற போட்டியிலும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரி20 பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் தென்னாபிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி முதல் இடத்தில் உள்ளார்.


Add new comment

Or log in with...