கோர விபத்தில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட இருவர் பலி

கோர விபத்தில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட இருவர் பலி-Accident-2-Killed-Including-Rev.-Father.jpg

திருகோணமலை, ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றும் வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த காருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோர விபத்தில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட இருவர் பலி-Accident-2-Killed-Including-Rev.-Father.jpg

இவ்விபத்து இன்று (01) காலை  9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்குத் தந்தையான கணேஷப்பிள்ளை நிதிதாசன் (49) மற்றும் அவர் பயணித்த காரை செலுத்தி வந்த காரின் சாரதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோர விபத்தில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட இருவர் பலி-Accident-2-Killed-Including-Rev.-Father.jpg

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை கெப்பித்திகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோர விபத்தில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட இருவர் பலி-Accident-2-Killed-Including-Rev.-Father.jpg

சடலம் தற்போது ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

கோர விபத்தில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட இருவர் பலி-Accident-2-Killed-Including-Rev.-Father.jpg

கோர விபத்தில் அருட்தந்தை ஒருவர் உள்ளிட்ட இருவர் பலி-Accident-2-Killed-Including-Rev.-Father.jpg

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், கந்தளாய் தினகரன் நிருபர் - எப். முபாரக்)

Add new comment

Or log in with...