'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் 3 மாதங்கள் நீடிப்பு

'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் 3 மாதங்கள் நீடிப்பு-One Country One Law Presidential Task Force Time Period Extended for 3 Months

'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நேற்றுடன் (28) நிறைவடையும் நிலையில் அதன் பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கியவாறு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும்,  நிபுணர்கள் சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் குறித்த ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணி உறுப்பினர்கள்

1. கலகொடஅத்தே ஞானசார தேரர்
2. பேராசிரியர்‌ சாந்திநந்தன விஜேசிங்க
3. சிரேஷ்ட விரிவுரையாளர் வீரவர்தனலாகே சுமேத மஞ்சுள
4. என்‌. ஜி. சுஜீவ பண்டிதரத்ன
5. சட்டத்தரணி இரேஷ்‌ செனெவிரத்ன
6. சட்டத்தரணி W.B.J.M.R. சஞ்சய மாரம்பே
7. ஆர்.ஏ. எரந்த குமார நவரத்ன
8. பாணி வேவல
9. மெளலவி M.Z.A.S. மொஹொமட்‌ (தலைவர், காலி உலமா சபை)
10. கலீல்‌ ரஹூமான்
11. அப்துல் அஸீஸ்‌ மொஹமட் நிசார்தீன்‌
12. இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன்
13. யோகேஸ்வரி பத்குணராஜா
14. ஐயம்பிள்ளை தயானந்தராஜா

PDF File: 

Add new comment

Or log in with...