பெண் ஒருவரின் கொலை தொடர்பில் மற்றுமொரு பெண் கைது

பெண் ஒருவரின் கொலை தொடர்பில் மற்றுமொரு பெண் கைது-Women Arrested over the incident of Murder of a Woman

மத்துகமை, பாலிக வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி இரவு வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் இருவரினால் குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மத்துகமை பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட 39 வயதான சந்தேகநபரானகுறித்த பெண் நுகேகொடை பிரதேசத்தில் வைத்து  நேற்றிரவு (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

கொலைக்கு உதவுதல் மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வது உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மத்துகமை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக நிஹால் தல்தூவ தெரிவித்தார்.


Add new comment

Or log in with...