முல்லேரியா தேசிய மனநல வைத்தியசாலையின் வார்ட் இல 03 இலங்கை விமானப்படையினால் புனர்நிர்மாணம் செய்து கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விமானப்படை தளத்தினால் இந்த வைத்தியசாலைக்கான வைத்திய உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டம் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சர்மினி பத்திரணவின் வழிகாட்டலின் கீழ் கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் டில்ஷான் வாசகேவின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றன.
அண்மையில் (15) இடம்பெற்ற இந்த வைபவம் மாதவழிபாடுகள் பிரித் நிகழ்வுடன் இடம்பெற்றதுடன், இந்தநிகழ்வில் விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் முல்லேரியா வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Add new comment