வடமாகாணத்தைச் சேந்த நன்னீர் மீனவர்களுக்கான 6.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான (தோணிகள்) குல்லாக்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் 6.4 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் மீனவர்களுக்கான குல்லா மற்றும் குல்லா கட்டடைகள் வழங்கும் நிகழ்வு மாங்குளத்தில் அமைந்துள்ள வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
வவுனியா,மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த நன்னீர் மீன்பிடி சங்கங்களை சேர்ந்த 19 மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு 49 குல்லாக்களும், 58 குல்லாக்கட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
(சண்முகம் தவசீலன்)
Add new comment