பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றில்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு-Prevention of Terrorism Act Amendment Bill Tabled in Parliament

பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (10) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸினால் இத்திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டின் 48ஆவது இலக்க பயங்கரவாத (தற்காலிக) சட்டத்தின் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலமே இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெப்ரவரி 09 மற்றும் 10ஆம் திகதிகளில் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) திருத்தச் சட்டமூலம், 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்பட்டு இன்று (10) நிறைவேற்றப்படவுள்ளன.


Add new comment

Or log in with...