சிவாஜிலிங்கம் ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஜூலை 26இல்

சிவாஜிலிங்கம் ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஜூலை 26இல்-Case Against MK Shivajilingam

எம்.கே. சிவாஜிலிங்கம், து.ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்றபொழுது நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை கடமை செய்யவிடாமல் தடுத்து, வாகனத்தை சேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான குறித்த வழக்கு தொடர்பான விசாரணையே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கம் ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஜூலை 26இல்-Case Against MK Shivajilingam

குறித்த வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது குற்றசாட்டிற்கு உள்ளானவர்கள் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், நீதவானிடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக தொடர்ச்சியாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சட்ட மாஅதிபரிடம் இருந்து எதிர்பாக்கப்படுவதாக சொல்லப்பட்டதை அடுத்து, அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரம் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும் என்று நீதிபதியால் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)


Add new comment

Or log in with...