பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட 8 குழுக்களும் அதன் உறுப்பினர்களும்

பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட 8 குழுக்களும் அதன் உறுப்பினர்களும்-Members to the 8 Parliament Committees Appointed

பாராளுமன்றம் இன்று (08) முற்பகல் 10.00 மணிக்கு, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தலைமையில் கூடியது.

இதன்போது பல்வேறு அறிவித்தல்களை பாராளுமன்றத்திற்கு அறிவித்த பிரதி சபாநாயகர்,

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது மனுக்களின் பிரதிகள்  எனக்குக் கிடைத்துள்ளதாக, பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சட்டவாக்க நிலையியற் குழு, நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு, சபைக் குழு, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய  குழு (CoPA), அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (CoPE), பொது மனுக்கள் பற்றிய  குழு, பின்வரிசைக் குழு ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதை பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

நியமிக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினர்கள் வருமாறு:

சட்டவாக்க நிலையியற் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 சனவரி 21ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக,  பிரதிச் சபாநாயகரை தவிசாளராகக் கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளனர்.

 1. (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்
 2. (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி
 3. நாமல் ராஜபக்ஷ
 4. மொஹான் பிரியதர்ஷன த சில்வா
 5. சிசிர ஜயகொடி
 6. (டாக்டர்) ராஜித சேனாரத்ன
 7. சந்திம வீரக்கொடி
 8. கோவிந்தன் கருணாகரம்
 9. ஹெக்டர் அப்புஹாமி
 10. இம்ரான் மஹ்ரூப்
 11. ஹர்ஷண ராஜகருணா
 12. பிரேம்நாத் சி. தொலவத்த
 13. மதுர விதானகே
 14. சாகர காரியவசம்
 15. (ஜனாதிபதி சட்டத்தரணி) ஜயந்த வீரசிங்க

நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 116 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் உட்பட பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளனர்.

 1. (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி
 2. (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த
 3. டிலான் பெரேரா
 4. சந்திம வீரக்கொடி
 5. மயந்த திசாநாயக்க
 6. சாள்ஸ் நிர்மலநாதன்
 7. கே. சுஜித் சஞ்ஜய பெரேரா
 8. சாகர காரியவசம்
 9. (கலாநிதி) சுரேன் ராகவன்

சபைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 117 (1)  இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக,  தவிசாளராகச் சபாநாயகரைக் கொண்ட சபைக் குழுவில் பணியாற்றுவதற்காக   பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளனர்.

 1. நிமல் லான்சா
 2. கஞ்சன விஜேசேகர
 3. பியல் நிசாந்த த சில்வா
 4. (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல
 5. (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் 
 6. ஜே.சீ. அலவத்துவல
 7. சாள்ஸ் நிர்மலநாதன்
 8. (மேஜர்) பிரதீப் உந்துகொட
 9. ஜகத் குமார சுமித்ராரச்சி
 10. கிங்ஸ் நெல்சன்
 11. (திருமதி) முதிதா பிரிஸான்தி
 12. நலின் பிரனாந்து
 13. மர்ஜான் பளீல்
 14. மதுர விதானகே 

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 118 (1) இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக   பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளனர்.

 1. எம். யூ. எம். அலி சப்ரி
 2. விஜித பேருகொட
 3. கனக ஹேரத்
 4. தாரக்க பாலசூரிய
 5. அநுராத ஜயரத்ன
 6. கபீர் ஹஷீம்
 7. (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார
 8. (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ
 9. (திருமதி) தலதா அதுகோரல  
 10. ஜீ.ஜீ. பொன்னம்பலம்
 11. வேலு குமார்
 12. (திருமதி) கோகிலா குணவர்தன
 13. ஷான் விஜயலால் த சில்வா
 14. கெவிந்து குமாரதுங்க
 15. (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார 
 16. பிரமித்த பண்டார தென்னகோன்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய  குழு (CoPA)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும்               2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய  குழுவில் பணியாற்றுவதற்காக   பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளனர்.

 1. உதய கம்மன்பில
 2. துமிந்த திசாநாயக்க
 3. தயாசிறி ஜயசேக்கர
 4. லசந்த அலகியவன்ன
 5. (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
 6. செஹான் சேமசிங்க
 7. பிரசன்ன ரணவீர
 8. திஸ்ஸ அத்தநாயக்க
 9. (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண
 10. ஹரின் பிரனாந்து 
 11. நிரோஷன் பெரேரா
 12. அஸோக அபேசிங்ஹ
 13. புத்திக பத்திறண
 14. கே. காதர் மஸ்தான்
 15. மொஹமட் முஸம்மில்
 16. சிவஞானம் சிறீதரன்
 17. ஹேஷா விதானகே
 18. (டாக்டர்) உபுல் கலப்பத்தி 
 19. பீ.வை.ஜீ. ரத்னசேக்கர
 20. வீரசுமன வீரசிங்ஹ
 21. (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார
 22. (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய

அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு (CoPE)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக   பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளனர்

 1. மஹிந்த அமரவீர
 2. மஹிந்தானந்த அலுத்கமகே
 3. ரோஹித அபேகுணவர்தன
 4. (கலாநிதி) சரத் வீரசேக்கர
 5. ஜயந்த சமரவீர
 6. டி.வீ. சானக
 7. இந்திக அனுருத்த ஹேரத்
 8. (கலாநிதி) நாலக கொடஹேவா
 9. ரஊப் ஹகீம்
 10. (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த
 11. அநுர திசாநாயக்க
 12. பாட்டளி சம்பிக ரணவக்க
 13. ஜகத் புஷ்பகுமார
 14. (கலாநிதி) ஹர்ஷ த சில்வா
 15. இரான் விக்கிரமரத்ன
 16. நலீன் பண்டார ஜயமஹ
 17. எஸ்.எம். மரிக்கார்
 18. பிரேம்நாத் சி. தொலவத்த
 19. சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
 20. மதுர விதானகே
 21. சாகர காரியவசம்
 22. (பேராசிரியர்) சரித்த ஹேரத்

பொது மனுக்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 122 (1)  இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பொது மனுக்கள் பற்றிய  குழுவில் பணியாற்றுவதற்காக   பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து  நியமிக்கப்பட்டுள்ளனர்

 1. காமினி லொக்குகே
 2. தயாசிறி ஜயசேக்கர
 3. நிமல் லான்சா
 4. ஜானக வக்கும்புர
 5. ச. வியாழேந்திரன்
 6. தேனுக விதானகமகே
 7. ஜீவன் தொண்டமான்
 8. இம்தியாஸ் பாகிர் மாகார்
 9. ஜகத் புஷ்பகுமார
 10. திலிப் வெதஆரச்சி
 11. மனுஷ நாணாயக்கார
 12. கே. காதர் மஸ்தான்
 13. அசோக்க பிரியந்த
 14. சிவஞானம் சிறீதரன்
 15. துஷார இந்துனில் அமரசேன
 16. முஜிபுர் ரஹுமான்
 17. (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
 18. வருண லியனகே
 19. ஜகத் குமார சுமித்ராரச்சி 
 20. (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ
 21. குலசிங்கம் திலீபன்
 22. நிபுண ரணவக
 23. (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ

பின்வரிசைக் குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 126 (1) மற்றும் (2) இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பின்வரிசைக் குழுவில் பணியாற்றுவதற்காக தவிசாளராக அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உட்பட பின்வரும்  உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து   நியமிக்கப்பட்டுள்ளனர்

 1. சு. நோகராதலிங்கம்
 2. செல்வராசா கஜேந்திரன்
 3. வருண லியனகே
 4. கபில அதுகோரல
 5. எம். உதயகுமார்
 6. சஞ்ஜீவ எதிரிமான்ன
 7. கருணாதாஸ கொடிதுவக்கு
 8. நாலக பண்டார கோட்டேகொட
 9. (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய
 10. டப்ளியூ.எச்.எம். தர்மசேன
 11. கிங்ஸ் நெல்சன்
 12. ரோஹண பண்டார
 13. குமாரசிறி ரத்னாயக்க
 14. சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
 15. டீ. வீரசிங்க
 16. (திருமதி) மஞ்சுலா திசாநாயக

Add new comment

Or log in with...