100 பசும் பால் உற்பத்திக் கிராமங்கள்

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் 100 கிராமிய பசும்பால் உற்பத்திக் கிராமங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பால்மாத் தட்டுப்பாடு மற்றும் அந்நிய செலாவணிப் பிரச்சினைக்குத் தீர்வாக, சப்ரகமுவ மாகாணசபை மற்றும் கால்நடைகள் பண்ணைகள் அபிவிருத்தி அமைச்சு இணைந்து 100 கிராமிய பசும் பால் உற்பத்திக் கிராமங்கள், பாற்பண்ணைகள், பால் உற்பத்தி பதனிடும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கிணங்க இவ்விரண்டு மாவட்டங்களிலும் 100 பாற்பண்ணைகள் மற்றும் பசும்பால் உற்பத்தி பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் உள்நாட்டுப்பால் உற்பத்திப் பாவனை அதிகரிப்ப துடன் பெருமளவு அந்நிய செலாவணி மீதியாவதாகவும் கிராமிய மட்டத்தில் இப்பணிகளை மேற்கொண்டுவரும் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்திற்கிணங்க பசும்பால் மற்றும் இத்துறைசார்ந்த உற்பத்திகளை போதியளவு பொதுமக்களுக்கு இலகுவாகக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...