மஞ்சள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதால், மஞ்சள் தட்டுப்பாடு இல்லாமல்போயுள்ளதாக கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
மஞ்சள் அறுவடை விழாவில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது, இராஜாங்க அமைச்சர்களைப் பற்றி மிக மோசமாக விமர்சனம் செய்த சிலர், இன்று அவர்களின் சேவைகளை கண்டு வியப்புற்றுள்ளனர்.
சகல அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களின் தேவைகளைபூர்த்திசெய்தும் வருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் போது தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்ததால், சுற்றுலாத் துறையும் வீழ்ச்சியடைந்தது. எனினும், ஜனாதிபதி அவர்கள் படிப்படியாக உல்லாசத்துறையை மேம்படுத்திவருகிறார்.
இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதித்துறையில் அதிக இலாபம் பெறுவதற்காகவே, புதிய பொருளாதார திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பிரதிபலன்கள் இப்போதல்ல எதிர்காலத்தில் கிடைக்கும்.
கம்பஹா மாவட்ட திவுலப்பிட்டி தேர்தல் தொகுதியில் வெற்றிலை ஏற்றுமதி கிராமங்கள், மலர் ஏற்றுமதி கிராமங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி பயிரிடப்பட்ட நெல் அறுவடை தற்போது கிலோ ஒன்று 70அல்லது 80ரூபா விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
“சுபிட்சத்தின் நோக்கு” தேர்தல் விஞ்ஞாபனத்தின் கொள்கையை வெற்றிகாணும் நோக்கில் விவசாயிகளுக்கு அதிகூடிய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
கரும்பு,சோளம், மரமுந்திரிகை, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறுதோட்டப் பயிர்ச் செய்கை களும் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
Add new comment