Thursday, January 27, 2022 - 3:12pm
வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகோற்சவ நிகழ்வுகள் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்று 07.30மணிக்கு உள்வீதி கொடி ஊர்வலத்தைத் தொடர்ந்து 11மணி அளவில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தினமும் விசேட பூஜைகளுடன் முற்பகல் 11 மணிக்கும் 6 மணிக்கும் சுவாமிகள் உள்வீதி, வெளிவீதி உலா இடம்பெறுவதுடன் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி காலை 8 மணிக்கு இரதோற்சவம் இடம்பெறும். இம்முறை கொரோனா தொற்று காரணமாக தேவஸ்தானத்திற்கு வருகைதரும் அடியார்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளை சுழற்சி, நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்கள்
Add new comment