புர்கினா பாசோ: ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

புர்கினா பாசோ இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதி ரொச் கபோரேவை பதவி கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.

இராணுவ அதிகாரி ஒருவரினால் அரச தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதே இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கு காரணமாக கூறியுள்ளார்.

இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்களை தடுப்பதில் தோல்வி அடைந்ததாக கபோரே மீது அதிருப்து அதிகரித்து வந்தது.

அவர் தற்போது எங்கே உள்ளார் என்று தெரியாதபோதும் கைது செய்யப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவம் குறிப்பிட்டது.

தலைநகர் ஒவாகடுகோவில் ஜனாதிபதி மாளிகை இராணுவ முகாம்களில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட சம்பவங்களுக்கு அடுத்த தினமே இந்த இராணுவ சதிப்புரட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக கலகத்தில் ஈடுபட்ட துருப்புகள் இராணுவத் தளபதிகளை நீக்கும்படியம் ஐ.எஸ் மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட குழுக்களுக்கு எதிரான போருக்கு போதிய வளங்களை தரும்படியும் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...