இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க; ஓய்வு பெற்றார் தில்ருவன்

இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க; ஓய்வு பெற்றார் தில்ருவன்-Rumesh Ratnayake Appointed as Interim Coach-Dilruwan Perera Annouce His Retirement

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள, அவுஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட ரி20 போட்டித் தொடருக்கான பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அணியின் சகல துறை ஆட்டக்காரரான தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான தில்ருவன் பெரேரா இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதோடு, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...