பாகிஸ்தான் காஷ்மிர் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் ஜம்மு மற்றும் காஷ்மிரின் கில்கிட்–பெல்டிஸ்தான் பிராந்திய குடிமக்கள் உணவு பற்றாக்குறை மற்றும் கறுப்புச் சந்தைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கில்கிட் நகர் மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் தற்போது தலைமை வகிக்கும் பாகிஸ்தான் தஹ்ரீக்கே இன்சாப் கட்டிசியின் கீழான உள்ளூர் நிர்வாகத்திற்கு எதிராக வீதி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

கில்கிட்–பெல்டிஸ்தான் மக்கள் கடுமையான குளிர்காலத்திற்கான அடிப்படை வசதிகளில் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக தெரியவருகிறது.

நாளாந்த அத்தியாவசிய பொருட்களுக்கான கறுப்புச் சந்தை மற்றும் ஊழல் இந்த விடயத்தை மேலும் சிக்கலாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கோதுமை மாவுக்கு கடும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் கில்கிட் நகர வீதிகளை முடக்கியுள்ளனர். கோதுமை மாவுக்கான ஒதுக்கீட்டை மீளப்பெறும்வரை பிராந்தியம் எங்கும் போராட்டத்தை தொடர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...