‘நாஜி வணக்கம்’ செய்த பெண் போலந்தில் கைது

முன்னாள் அஸ்ச்விட்ஸ்–பிர்கனுவ் வதை முகாமுக்குள் நாஜி வணக்கத்தை வெளியிட்ட நெதர்லாந்து சுற்றுலா பயணி ஒருவர் போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான அந்தப் பெண் அந்த வதை முகாமின் நுழைவாயில் பகுதியில் இவ்வாறு சைகை செய்துள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பெண் மீது நாஜி பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சுத்தப்பட்டுள்ளது. அரச வழக்கறிஞர்கள் அவர் மீது விதித்த அபராதத்தை செலுத்துவதற்கு அவர் இணங்கியுள்ளார்.

இந்த நடத்தை ஒரு மோசமான நகைச்சுவை செயலாக இருந்தது என்று அந்தப் பெண் பீ.ஏ.பீ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

நாஜி பிரசார குற்றத்திற்கு போலந்தில் சுற்றுலா பயணிகள் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இந்தக் குற்றச்சாட்டுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

நாஜி ஜெர்மனியால் கட்டப்பட்ட இந்த வதை முகாமில் குறைந்தது 1.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.


Add new comment

Or log in with...