ஹிரோஷிமா அணு குண்டின் பல நூறு மடங்கான ஆற்றல்

டொங்கா எரிமலை வெடிப்பின்போது ஹிரோஷிமா அணு குண்டு வெடிப்பின் பல நூறு மடங்கு சக்தி வெளிப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 15 ஆம் திகதி இடம்பெற்ற ஹஜங்கா டொங்கா -ஹுங்கா ஹாபாய் எரிமலை வெடிப்பின்போது 40 கிலோமீற்றர் உயரத்திற்கு சிதைவுகளை உமிழ்ந்ததோடு இராட்சத சுனாமி அலையையும் ஏற்படுத்தியதாக நாசா புவிக் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. “இந்த வெடிப்பின்போது ஐந்து தொடக்கம் 30 மெகாடொன் (ஐந்து தொடக்கம் 30 மில்லியன் டொன்கள்) டீ.என்.டீயிற்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தியதாக நாம் கருதுகிறோம்” என்று நாசா விஞ்ஞானி ஜிம் கார்வின் செய்தி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெடிப்பு 1945 ஓகஸ்ட் மாதம் ஜப்பான் நகரான ஹிரொஷிமா மீது அமெரிக்கா வீசிய அணு குண்டை விட பல நூறு மடங்கு சக்திவாய்ந்ததாக இருந்தது என்று நாசா தெரிவித்துள்ளது. ஹிரோஷிமா அணு குண்டு சுமார் 15 கிலோ டொன் டீ.என்.டீ ஆற்றல் கொண்டதாகும்.


Add new comment

Or log in with...