மேற்கத்தேய அதிகாரிகளுடன் ஒஸ்லோவில் தலிபான் பேச்சு

நோர்வே சென்றிருக்கும் தலிபான் உறுப்பினர்கள் மேற்கத்தேய நாடுகளின் அதிகாரிகளை சந்தித்துள்ளனர். அந்தக் குழு ஆப்கானை கைப்பற்றிய பின் ஐரோப்பாவில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடுவது இது முதல் முறையாகும்.

மூன்று நாட்கள் இடம்பெறும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஆப்கானின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் பற்றி அவதானம் செலுத்தப்படவுள்ளது.

95 வீதமான ஆப்கானியர்கள் போதுமான உணவு இன்றி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

தலிபான்களுடனான சந்திப்புக்கு எதிராக ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தலிபான் உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித உரிமை செயற்பாட்டாளர்களை சந்தித்தபோதும் அங்கு இடம்பெற்ற பேச்சுவார்த்தை பற்றிய விபரம் வெளியாகவில்லை.

இதில் அமெரிக்க வங்கிகளில் முடக்கப்பட்டிருக்கும் பல பில்லியன் டொலர் நிதியை கையாள்வதற்கு தலிபான்கள் அனுமதி கோரவுள்ளனர். ஆப்கானில் வேலையின்மை மற்றும் உணவு விலை அதிகரிப்பை காணமுடிகிறது.


Add new comment

Or log in with...