ஐ.அ. இராச்சியத்தின் மீது பாய்ந்த ஏவுகணை அழிப்பு

ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் இரண்டு ஏவுகணைகளை ஐக்கிய அரபு இராச்சியம் இடைமறித்துத் தாக்கி அழித்துள்ளது. யெமனில் இருந்துகொண்டு செயல்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆறாண்டுகளாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு எதிராக ஏவுகணைகள், டிரோன்கள் கொண்டு பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் திகதி முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சிய தலைநகர் அபுதாபியில் எரிபொருள் கிடங்கு மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்று அபுதாபியில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளனர். அப்போது அவற்றை இடைமறித்துத் தாக்கி அழித்ததாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹூத்திக்களின் பலிஸ்டிக் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் தெற்கில் விழுந்ததில் பங்களாதேஷ் மற்றும் சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக சவூதி அரேபியா குறிப்பிட்டு ள்ளது. இதனால் தொழில்துறை பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது மற்றொரு ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...