இராணுவத்துக்கு அதிக பணம் வாரிக் கொட்டுகிறது சீனா!

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக இராணுவத்திற்கு செலவு செய்தால் சோவியத் குடியரசு போல சீனாவும் சிதறும் என்று சீன வெளியுறவு கொள்கை ஆலோசகரான ஜியா குய்ங்குவா எச்சரித்துள்ளார்.

சீனாவின் சி.பி.பி.சி.சி. எனப்படும் அரசியல் ஆலோசனை உயர் மட்டக் குழுத் தலைவரான ஜியா குய்ங்குவா, சர்வதேச பாதுகாப்பு ஆய்வு இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கட்டுரையிலேயே இந்த எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.

சோவியத் குடியரசு தேச பாதுகாப்புக்காக அளவிற்கு அதிகமாக இராணுவத்திற்கு செலவு செய்தது. அதனால் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்க நேர்ந்தது. அங்கு மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவில்லை. அதனால் சோவியத் அரசு மக்களின் செல்வாக்கை இழந்து தனித்தனி நாடுகளாக 1991 இல் சிதறியது. கம்யூனிஸ்ட் நாடான சோவியத் குடியரசின் வீழ்ச்சி சீன பாடசாலைகளில் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டது.

இதே நடைமுறையை தற்போது சீனா பின்பற்றி வருகிறது. தேசப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கண்ணை மூடிக் கொண்டு இராணுவ பலத்தை அதிகரித்து வருவதால் செலவினங்கள் உயர்ந்து வருகின்றன. இது விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களுக்கு தடைக்கல்லாக அமைந்து விடும். இதன் தாக்கம் சோவியத் குடியரசு போல சீனாவுக்கும் ஏற்படலாம். சீனா சிதறுவதற்கு வழிவகுத்து விடும் ஆபத்து உள்ளது என்று ஜியா குய்ங்குவா எச்சரிக்ைக செய்துள்ளார்.


Add new comment

Or log in with...