ஐக்கிய இராஜியத்தின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் பல பாடநெறிகளை கற்பதற்கான சந்தர்ப்பம் இலங்கை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க பிரித்தானியாவில் விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த டி சில்வா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக தலைவரிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் புதிய தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தை பெறுவதற்கு வழிவகுக்கும் பாடநெறிகளை வழங்குவதற்கு இணைந்து செயல்படும் நோக்கத்துடன் தற்போது ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்களில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ,முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி ,பாடசாலைகள் அடிப்படை வசதி மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழக அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
18ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைக்கழக பிரதிநிதிகளான பேராசிரியர் பிரென்டன் நோபல் (பாடசாலை தலைவர் -உயிரியல் விஞ்ஞானம்) மற்றும் ஸ்டீவன் வொலிஸ்(தேசிய கல்வி பணிப்பாளர்) ஆகியோரை சந்தித்தார். அதன்படி பின்வரும் பாட நெறிகள் தொடர்பாக இணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இலங்கை மாணவர்களுக்கு பேண்தகு மற்றும் STEM நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான குறுகிய பாடநெறிகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
தொடர்ச்சியான தொழில் அபிவிருத்தி (CPDS) எனப்படும் குறுகிய பாடநெறி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், உயிரின தொழில்நுட்பம் மற்றும் பொதுமக்கள் சுகாதாரம் போன்ற பிரிவுகளில் கற்கைகளை மேற்கொள்ள இலங்கை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
அதைத்தவிர உலகளாவிய பொதுமக்கள் சுகாதார போசனை போன்று சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு உள்ளிட்ட மற்றும் முகாமைத்துவம் தொடர்பான முதுமாணி பட்டத்திற்கான பாடநெறிகளை கற்க இலங்கை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
Add new comment