புலிகள் இரைதேடி கிராமத்திற்குள் ஊடுருவல்

வைப்பகப்படம்

பலாங்கொடை சமனலவத்த பிரதேசத்தில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  இப் பிரதேச மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அடர்ந்த வனங்களால் சுற்றியுள்ள சமனலவெவ பிரதேசத்தை  நோக்கி இவ்வனங்களின் கற்குகைகளில் வாழும் புலிகள் இரைதேடி வருவதால் இந்நிலைமை ஏற்பட் டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேச மக்களின் குடியிருப்புக்களை நோக்கி வரும் புலிகள் வீடுகளில் வளர்க்கப்படும் பிராணிகளான ஆடுகள், கோழிகள், நாய்கள் போன்றவற்றை இரையாகக் கொள்வதாகவும் இரவு பகலாக இந்த அச்சுறுத்தல் நிலவுவதால் தமது சிறிய  குழந்தைகள் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாகவும்   இப் பிரதேச  மக்கள்  தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்களது பிரதான ஜீவனோபாயமாக தேயி‌லை பயிர்ச்செய்கை விளங்குவதால் பெரும்பாலும் கூட்டாகவே  தோட்டங்களில் வேலைகளில்  ஈடுபடுவதாகவும் இம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

 


Add new comment

Or log in with...