ஜனவரி 28 முதல் மட்டக்களப்பு - கொழும்பு 'புலதுசி' கடுகதி ரயில் சேவை

மட்டக்களப்பு முதல் கொழும்பு வரையிலான அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலன்னறுவை - கொழும்பு கோட்டைக்கு இடையில் நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்ட  'புலதிசி' அதிவேக குளிரூட்டப்பட்ட புகையிரத சேவையானது, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் ஜனவரி 28 முதல் மட்டக்களப்பு - கொழும்பு 'புலதிசி' கடுகதி சேவையாக விஸ்தரிக்கப்படவுள்ளது.

இப்புகையிரத சேவையானது மட்டக்களப்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். மீண்டும் பிற்பகல் 3.05 கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் புகையிரதமானது இரவு 9.52 க்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(கல்லடி குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...