புகையிரதம் மோதி இளைஞன் பலி

சாவகச்சேரி, சங்கத்தானையில்  இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) பிற்பகல் 6.30 மணியளவில் அரசடி புகையிரதக் கடவைக்கும் சங்கத்தானை புகையிரதக் கடவைக்கும் இடைப்பட்ட பாதுகாப்பற்ற தண்டவாளப் பகுதியை கடக்க முற்பட்ட இளைஞனை கொழும்பிலிருந்து வந்த கடுகதிப் புகையிரதம் மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம், இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான உதயகுமார் பானுசன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தண்டவாளப் பகுதிக்கு அப்பால் உள்ள கடைக்கு சென்று விட்டு தண்டவாளத்தைக் கடந்த இளைஞன் மீண்டும் கடையில் தவறவிடப்பட்ட தனது பொருள் ஒன்றினை எடுப்பதற்காக தண்டவாளத்தைக் கடந்த போது ரயில் மோதித் தள்ளியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(சாவகச்சேரி விசேட நிருபர்)


Add new comment

Or log in with...