கொரோனா தொற்றை எதிர்கொள்ள மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ

கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கு சமூக ரீதியாக பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் என்பது எதிர்பாராத காலத்தில் பரவிய பெரும் தொற்றாகவே கருதமுடிகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய பரம்பரையும் எமது கடந்த பரம்பரையும் இது போன்ற உலகளாவிய பெருந்தொற்றை எதிர் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், தற்போதைய சமூகம் இந்த தொற்று நோயை எதிர்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

உலகில் கைத்தொழில் புரட்சி, தொழில்நுட்ப புரட்சி ஆகியவை தொற்றுக்களோடு ஆரம்பித்துள்ளதாகவும் இந்த வைரஸ் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாடும் நாட்டு மக்களும் எதிர்காலம் நோக்கி முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...