இந்தியாவுடன் நல்லுறவுக்கு ஜனாதிபதி முக்கியத்துவம்

மிலிந்த மொரகொட தெரிவிப்பு

'இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்றது தொடக்கம் இந்தியாவுடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இலங்கையும் இந்தியாவும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விருப்பமாகும்' என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த

பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

'கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் இந்தியாதான் எங்களுக்கு தடுப்பூசி கொடுத்து உதவிய முதல் நாடு. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்திய இலங்கை பொருளாதார நிலைமை மிக மோசமானதாகவும் சவாலாகவும் இருக்கிறது. இதனை சீரமைக்க இந்தியாவும் உதவி செய்து வருகிறது என்றும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...