ஆபத்தான பகுதிகளை அடையாளப்படுத்தவும்

பொதுமக்கள் கோரிக்கை முன்வைப்பு

ஆபத்தான கடற்பகுதிகள் தொடர்பில் அறிவுறுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். அவ்வாறில்லை எனில், தினந்தோறும் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, வெலிகம கடற்பகுதியில் நீராடச் சென்று காணாமல்போன 12 வயது மாணவியைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போயிருந்த இரண்டு பாடசாலை மாணவிகளில் ஒருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.வெலிகம கடற்பகுதியில் 4 மாணவிகள் அவர்களது பெற்றோருடன் குறித்த பகுதியில் நேற்று முன்தினம் மதியம் நீராடச் சென்ற நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இரண்டு மாணவிகள் காப்பாற்றப்பட்ட நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, திருகோணமலை - இறக்கக்கண்டி பாலத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி நேற்று முன்தினம் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியதன் பின்னர் தமது வகுப்பாசிரியருடன் குறித்த கடற்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...