தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க தீர்மானம்

வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெ​ெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இனிமேல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என்றும் அதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே முழுமையான தடுப்பூசிகளைப்பெற்றுக் கொண்டவர்களாக கணிக்கப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர்:

தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமலிருக்க எவருக்கும் உரிமை உள்ளது.

எனினும் பிறருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதால் அனைவரும் பொறுப்புடன் தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...