- தொடரின் 4 போட்டிகளிலும் வென்று சாதனை
மலேசியாவில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுகள் மகளிர் கிரிக்கெட் தகுதிகாண் சுற்றுப் போட்டிகளின் (ரி20) நிறைவில் இலங்கை மகளிர் அணி 2022 பொதுநலவாய விளையாட்டுகள் தொடருக்கு தெரிவாகியுள்ளது.
இன்று இடம்பெற்ற பங்களாதேஷ் மகளிர் அணியுடனான போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது.
இத்தொடரில் இலங்கை, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, மலேசியா, கென்யா ஆகிய நாடுகளின் மகளிர் அணிகள் விளையாடியதோடு, இவ்வணிகள் தங்களுக்குள் பலப்பரீட்சை நடாத்தின.
அதற்கமைய, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தாங்கள் ஏனைய அணிகளுடன் விளையாடிய 3 போட்டிகளையும் வெற்றி கொண்ட நிலையில், இன்று (24) இடம்பெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் இலங்கை அணி 22 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்டது.
இதன் மூலம், இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் இடம்பெறவுள்ள2022 பொதுநலவாய விளையாட்டுகள் மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி பங்களாதேஷ் அணிக்கு 137 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இப்போட்டியின் நாயகியாகவும் தொடரின் நாயகியாகவும் இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவானார்.
SRI LANKA WOMEN INNINGS (20 OVERS MAXIMUM)
BANGLADESH WOMEN INNINGS (TARGET: 137 RUNS FROM 20 OVERS)
TEAMS | FOR | AGAINST | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1 |
4 | 4 | 0 | 0 | 0 | 8 | 3.924 | 582/69.3 | 356/80.0 |
2 |
4 | 3 | 1 | 0 | 0 | 6 | 2.005 | 370/63.2 | 307/80.0 |
3 |
4 | 2 | 2 | 0 | 0 | 4 | -1.393 | 368/68.0 | 431/63.2 |
4 |
4 | 1 | 3 | 0 | 0 | 2 | -2.521 | 337/78.2 | 464/68.0 |
5 |
4 | 0 | 4 | 0 | 0 | 0 | -2.651 | 274/68.0 | 373/55.5 |
Add new comment