பால் மா தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை; போதியளவு டொலர்கள் விநியோகம்

மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால்

நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்த வித காரணமும் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பால்மா இறக்குமதியாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க போதுமான அளவில் டொலர்  வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதனால் நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எந்த காரணமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள்  அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாட்டில் தற்போது பால் மாவுக்கான தட்டுப்பாடு அதிகமாகியுள்ளது. இத்தகைய நிலையிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் அதனை துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்கு போதுமான டொலரை மத்திய வங்கி விடுவிக்க வேண்டுமென்றும் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதற்கிணங்க மத்திய வங்கியினால் போதுமானளவு டொலர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.              (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...