குளத்தில் பூ பறிக்கச் சென்ற மாணவன் மூழ்கி மரணம்

குளத்தில் பூ பறிக்கச் சென்ற மாணவன் மூழ்கி மரணம்-Student Drown to Death

புத்தளம், மாதம்பை, தினிப்பிட்டிய குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாதம்பை, பூவக்குளம் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவன் இன்று காலை தனது சக நண்பர்கள் இருவருடன்  குளத்தில் பூ பறிக்கச் சென்ற நிலையிலேயே நீரில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தாரிடம் ஓப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்


Add new comment

Or log in with...