எமது முயற்சியை குழப்பும் சுமந்திரன்

சுரேஸ் குற்றச்சாட்டு

நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்படும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் சுமந்திரன்  தொடர்ந்து செயற்படுவது நல்ல விடயமல்ல என ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஆவணம் கொடுப்பது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகப் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் பேச்சுகளை நடத்தி ஆவணத்தைத் தயார்படுத்தி இந்திய தூதுவர் கொடுத்தது.

ஆனால், சுமந்திரன் ஊட கவியலாளர்களைச் சந்திக்கின்றபோது நாங்கள் இந்த ஆவணத்தை முற்று முழு தாக மாற்றிவிட்டோம். இது தமிழரசுக் கட் சியினுடைய ஆவணமாக மாறிவிட்டது என்று ஒரு விடயத்தை தொடர்ந்து சொல்லி வருகின்றார்.

இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் ஆவணத்தை கொடுப்பதற்கு சுமந்திரன் விரும்பவில்லை என்பதை யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெளிவாகக் கூறி இருக்கின்றார்.

ஆனால், சம்பந்தன் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இப்போது 13ஜ நடைமுறைப்படுத்தும்படி கூறும் போது வ டிவே லு பா ணி யி ல் நாங்கள் மாற்றி விட்டோம் என்று சுமந்திரன் கூற ஆரம்பித்திருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மை என்னவென்றால் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் கூறிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்த வரலாற்றை சேர்த்திருக்கலாம்.

அந்த வரலாற்றைச் சேர்த்தால் கூட கோரிக்கை 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதான்.

ஆகவே, நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது நல்ல விடயமல்ல.

தன்னை ஒரு புத்திஜீவியாகவும் அனைத்தும் தெரிந்தவராகவும் கூறிக் கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை கைவிட்டு செயற்பட வேண்டும்’ என்றார்.


Add new comment

Or log in with...