37,500 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு பணம் செலுத்தப்பட்டது

37,500 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு பணம் செலுத்தப்பட்டது-37500 Metric Ton Fuel Ship

- 7 நாட்களுக்கு போதுமான 10,000 மெட்ரிக் தொன் எரிபொருள் மின்சாரத்திற்கு

37,500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் வந்த இரண்டு கப்பல்களுக்கு இன்று (19) கொழும்பு துறைமுகத்தில் வைத்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிதியின் அடிப்படையில் குறித்த பணம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருளில் 10,000 மெட்ரிக் தொன்கள் நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மின்சார உற்பத்திக்காக வழங்கப்படவுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நேற்றைய (18) அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19)  இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபைக்கு நாளாந்தம் 1,500 மெட்ரிக் தொன் எரிபொருள் அவசியமாவதாக தெரிவித்த அவர், அதற்கமைய, மின்சார சபைக்கு எதிர்வரும் 7 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இவ்வாறு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...