சர்வதேச மகளிர் தினத்தில் ஃபேபுலஸ் ஃபேமின் அவார்டு

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களை உருவாக்கும் ஓரமாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  இந்த அமைப்பு அடுத்த செயல் திட்டமாக உலகில் வாழும் தமிழ் பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க செயல் திட்டம் தீட்டி அவர்களுக்கு பயிற்சி அளித்து வழி காட்டவும் தொழில் வாய்ப்புகளை வல்லுனர்கள் மூலம் கருத்தரங்கம் நடத்தி அதன்மூலம் செயலாற்ற உள்ளது.  மேலும் பலதுறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி அதன்மூலம் பெண்களுக்கு சாதனை செய்ய வேண்டும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் விதமாக இந்த விருது அமைய உள்ளது.  இவ்வாண்டு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய ரயில்வே பணி, இந்திய அயல்நாட்டு பணி, துணைவேந்தர், பேராசிரியர், பொறியியலாளர், விமானி, விண்வெளி துறை, விளையாட்டுத்துறை, சமூக சேவகர், திரைத்துறை, அரசியல், பத்திரிகையாளர் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஃபேபிலஸ் ஃபேமின் விருதை சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. சர்வதேச அளவில் நடைபெறவேண்டிய இந்த நிகழ்வு மருத்துவ பேரிடர் காலத்தில் இவ்வாண்டு இந்திய அளவில் சாதனை புரிந்த பெண்களுக்கு மட்டும் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...