இறுதி முயற்சியான மேன்முறையீட்டிலும் தோல்வி, நாடு கடத்தப்படுகின்றார் நோவக் ஜோகோவிச்

- ஆஸி பகிரங்க டென்னிஸ் போட்டி இன்று

அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான தனது இறுதி முயற்சியான மேன்முறையீட்டிலும் தோல்வியடைந்துள்ள நோவக் ஜோகோவிச் நாடு கடத்தப்பட்டார்.

தடுப்பூசி போடப்படாத செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்யும் அரசாங்கத்தின் முடிவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இன்று இடம்பெற்ற மேன்முறையீட்டு மனுமீதான விசாரணையில், 34 வயதான நோவக் ஜோகோவிச் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசாங்கம் வாதிட்டது.இந்த வழக்கில் ஜோகோவிச் தோல்வியுற்றால் நாடு கடத்தப்படுவதோடு மூன்று ஆண்டுகள் அவுஸ்திரேலியாவுக்கான விசாவை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்படும் .

அவுஸ்திரேலியாவுக்குள் நுழையவதற்கு அவசியமான தடுப்பூசியை அவர் செலுத்தி இருக்கவில்லை என்பதனால் அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் அவரது விசா அனுமதியை இரத்து செய்தார்.ஜோகோவிச்சின் விசா இரத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்ம் அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கடந்த 10-ம் திகதி தீர்ப்பளித்தது. இதனை அடுத்து அவர் அவுஸ்திரேலிய பகிரங்கத்துக்கு தயாராக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை நேற்று முன்தினம் மீண்டும் இரத்து செய்தார். இதனால் அவர் மறுபடியும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த செயற்பாடு ‘பகுத்தறிவற்றது மற்றும் நியாயமற்றது’ என நோவக் ஜோகோவிச்சின் சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அவுஸ்திரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலியான தகவலை உள்ளடக்கியதை நொவெக் ஜோக்கோவிச் ஒப்புக்கொண்ட நிலையில், அவரது விஸாவை மீண்டும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மெல்போர்னில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் விளையமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவால், அவுஸ்திரேலியப் பகிரங்க விருதைத் தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பை அவர் இழந்தார்.

மேலும், 21 முறையாக Grand Slam விருதை வெல்லும் பெரும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

அரசாங்க முடிவுக்கு ஆஸி டென்னிஸ் இரசிகர்கள் வரவேற்பு அவுஸ்திரேலிய டென்னிஸ் இரசிகர்களில் பலர், டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச்சின் விசா அனுமதி இரண்டாம் முறையாக இரத்து செய்யப்பட்டதை வரவேற்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவைப் பெரும்பாலானோர் ஆதரித்ததாக News Corp நிறுவனம் இணையத்தில் நடத்திய கருத்த்துக் கணிப்பில் தெரியவந்தது.


Add new comment

Or log in with...