அரச ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ரூ. 5,000; சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ரூ. 5,000; சுற்றறிக்கை வெளியீடு-Rs 5000 Allowance for Governement Servants & Pensioners

அரச ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ரூ. 5,000 மாதாந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுச் சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரத்னசிறியினால் குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 03ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறித்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இக்கொடுப்பனவு ஒரு வருடத்திற்கு மாதாந்தம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 • ரூ. 5,000 கொடுப்பனவை பெறத் தகுதியுடைய அரசாங்க ஊழியர்கள்
 1. மாதாந்த சம்பளம் பெறும் நிரந்தர/ தற்காலிக/ ஒப்பந்த ஊழியர்கள்
 2. நாளாந்த சம்பளம் பெறும் ஊழியர்கள்
 3. ஓய்வூதியதாரர்கள்
 • சம்பளமற்ற விடுமுறை பெற்றிருக்கும் உத்தியோகத்தர்கள் இந்த கொடுப்பனவுக்கு உரித்துடையவர்களாகமாட்டார்கள். அரைச்சம்பள விடுமுறை பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு இந்தக் கொடுப்பனவின் அரைவாசியே உரித்துடையதாகும்
 • நாளாந்த சம்பளம் பெறுபவர்களுக்கு சேவைக்கு சமூகம் அளிக்கவேண்டிய முழுமையான நாட்களும் சேவைக்கு சமூகமளித்திருந்தால், முழு கொடுப்பனவும் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு சமூகமளிக்கவில்லையெனில் சேவைக்கு சமூகமளித்த நாட்களின் விகிதத்திற்கு ஏற்ப கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும்.
 • எவரேனும் ஒரு உத்தியோகத்தர் பல ஓய்வூதியம் அல்லது ஓய்வூதியத்துடன் விதவைகள்/ அனாதைகள்/ ஓய்வூதியத்தை பெறுவாரேயானால் அத்தகைய நபருக்கு ஒரு மாதத்திற்கு கொடுப்பனவாக ரூபா 5,000 மட்டுமே உரித்துடையதாகும்.
 • நடைமுறையிலுள்ள ஏற்பாடுகளுக்கு ஏற்ப மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்துடன் உரித்தாகும் கொடுப்பனவு மட்டுமே உரித்தாகும்
 • ஓய்வூதியதாரர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவது குறித்து ஓய்வூதிய பணிப்பாளர் நாயகத்தினால் மேலதிக தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படும்
 • அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டசபைகளில் உத்தியோகத்தர்களுக்கு இந்தக் கொடுப்பனவை வழங்குவது பற்றிய அறிவுறுத்தல்கள், அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும்
 • மேலும் 2019.04.22 ஆம் திகதிய 9/2019 அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்படும் ரூபா 2,500 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு மற்றும் 2013.12.31ஆம் திகதி 37/2013 அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தொடர்ந்தும் அப்படியே நடைமுறைப்படுத்தப்படும்.
 • இந்த சுற்றறிக்கை திறைசேரியின் இணக்கத்துடன் வெளியிடப்படுகிறது

ஜே.ஜே. ரத்னசிறி
செயலாளர்
பொதுச் சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

PDF File: 

Add new comment

Or log in with...