Natular DT’ சேதன நுளம்பு கொல்லி இலங்கையில் அறிமுகம்

 

நுளம்புகளால் பரவும் நோய்களுக்கு எதிராக இலங்கைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சேதன நுளம்பு கொல்லி இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நுளம்புகள் பெருகும் பகுதிகளை கட்டுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட Natular DT தயாரிப்பை DTW இன்டர்நஷனல் பிரைவட்லிமிடெட், UPL லிமிடெட் மற்றும் Clarke உடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. டெங்கு மற்றும் Culex நுளம்புகளை கட்டுப்படுத்த உதவும் வகையிலும் அவற்றினால் பரவும் நோயை கட்டுப்படுத்த உதவுவதற்காகவும் இந்த தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Natular DT என்பது வில்லைவடிவில் அமைந்திருப்பதுடன், நீர்தேங்கி நிற்கும் மழை நீர்வழிந்தோடிகள், மழைநீர்சேகரிப்பு தாங்கிகள், மொட்டைமாடி நீர்தேங்கும் பகுதிகள், நீர்குட்டைகள் மற்றும் வீடுகளின் முகப்பில் நீர்தேங்கி நிற்கும் பகுதிகளில் பயன்படுத்தக் கூடியவகையிலமைந்துள்ளது.

 

வருடாந்தம் 50,000க்கும் அதிகமான டெங்குதொற்றுகள் பதிவாகும் நிலையில், இலங்கையில் டெங்கு நுளம்புபரவும் பகுதிகளை கட்டுப்படுத்தும் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவும்முறையாக DTW இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட்டினால் Natular DT அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முன்னர்அமெரிக்கா, பிரேசில், சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தவில்லை 100 சதவீதம் சேதனத் தயாரிப்பாக அமைந்திருப்பதுடன், 60 நாட்களுக்கு 200 லீற்றர்கள் வரை தாங்கிக் கொள்ளக்கூடியது.


Add new comment

Or log in with...