கொவிட்-19: கித்சிறி கஹட்டபிட்டிய காலமானார்

கொவிட்-19: கித்சிறி கஹட்டபிட்டிய காலமானார்-COVID-19-Kithsiri Kahatapitiya-Passed Away

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய காலமானார்.

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

ஐ.தே.க. உறுப்பினரான இவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் (2020) ஐ.ம.ச. கட்சியில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிருந்த போதிலும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...