கடற்கரை பள்ளி 200ஆவது கொடியேற்ற விழா முத்திரை வெளியீடு

கல்முனை கடற்கரைப்  பள்ளிவாசலின் 200 ஆவது கொடியேற்ற  விழாவை சிறப்பிக்கும் முகமாக  வெகுசன ஊடகத் துறை அமைச்சர் டலஸ் அளகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு 25 ரூபாய் பெறுமதியான முத்திரையினை நேற்று (06) மாலை  வெளியிட்டு வைத்தார்.

இக் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது  கொடியேற்ற விழாவானது கடந்த 4 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ .அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் ஆகியோர்  கலந்து கொண்டு உரையாற்றினர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)
 


Add new comment

Or log in with...