கந்தப்பளை - கோனப்பிட்டிய பகுதிக்கான போக்குவரத்து சீரமைப்பு

தடைப்பட்டிருந்த கந்தப்பளை -கோனப்பிட்டிய பகுதிக்கான போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வீதியில் வாகன போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியுள்ளது.

நேற்று (05) அதிகாலை 1.30 மணியளவில் கோனப்பிட்டிய கல்கந்தை  பகுதியில் பிரதான வீதியின் மூன்று பாலங்களில் ஒரு பாலத்தின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்து கற்களாலும்,மரங்கள் மற்றும் மண்ணால் முற்றாக மூடப்பட்ட நிலையில் இவ் வீதியின் போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதையை சீர் செய்ய வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்த போதிலும் கோனப்பிட்டிய இளைஞர்கள் கூடி பெரும் சிரமத்துக்கு மத்தியில் கற்களை அகற்றி வீதியின் போக்குவரத்துக்கு வழிசமைத்தனர். இதையடுத்து அதிகாலை முதல் மூடப்பட்டிருந்த இவ்வீதி மதியம் 1.00 மணியளவில் சீர் செய்யப்பட்டு வாகன போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.

இருப்பினும் இவ்வீதியில் மேலும் அனர்த்தங்களை தடுக்க பிரதான பாலத்தின் குறைகளை சரி செய்து அச்சமின்றி பயணிக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(ஆ. ரமேஸ்)


Add new comment

Or log in with...