விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க தீர்மானம்

  விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

கடந்த வருடத்தில் விவசாயிகளின் பயிர்ச்செய்கை பாதிப்பிற்கு  நஷ்ட ஈடாக 5000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இந்த வருடத்திலும் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய காப்புறுதி சபை அதற்கான தயார்நிலையிலுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நெல் சந்தைப்படுத்தும் சபை இம்முறை பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லை 75 ரூபாவுக்கு கொள்வனவுசெய்ய தீர்மானித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் சேதனப் பசளை உபயோகித்து நெற் பயிர்ச்செய்கையை மேற்கொண்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக இம்முறை பெரும்போகத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு மேலதிகமாக 25 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...