நீதிமன்ற அவமதிப்பு; கைதான துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை

நீதிமன்ற அவமதிப்பு; கைதான துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை -Condemn of Court-Duminda Nagamuwa Released on Bail

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், கைதான முன்னிலை சோசலிச கட்சியின் (FSP) பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (04) பிற்பகல் பொரளை பிரதேசத்தில் வைத்து, கடுவலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட துமிந்த நாகமுவவிற்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 09ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட உருவகம் ஒன்றில் நீதிமன்றத்தின் பெயரை எழுதி, நீதிமன்றத்தை தேவைப்படுது கடுவலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விடுக்கப்பட்ட திறந்த படி ஆணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...