ஜனவரி 05 முதல் அமுலாகும் புதிய பஸ் கட்டணங்கள் வெளியீடு

ஜனவரி 05 முதல் அமுலாகும் புதிய பஸ் கட்டணங்கள் வெளியீடு-Increased-Bus-Fare-From-January-05

எதிர்வரும் 05ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பஸ் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இக்கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் புதன்கிழமை (05) முதல் பஸ் கட்டணங்கள் 17% இனால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 17ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 29ஆம் திகதி பஸ் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவினால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 05 முதல் அமுலாகும் புதிய பஸ் கட்டணங்கள் வெளியீடு-Increased-Bus-Fare-From-January-05


Add new comment

Or log in with...