உள்நாட்டு சீமெந்து விலைகள் ரூ. 1,375 ஆக அதிகரிப்பு

உள்நாட்டு சீமெந்து விலைகள் ரூ. 1,375 ஆக அதிகரிப்பு-Cement price increased by Rs. 100

உள்நாட்டில் தயாரிக்கப்படும் 50kg சீமெந்துப் பொதிகளின் விலைகள் ரூ.  1,275 இலிருந்து ரூ. 1,375 ஆக ரூ. 100 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று (01) முதல் இவ்விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக, உள்ளூர் சீமெந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த நவம்பர் 07ஆம் திகதி ரூ. 1,098 ஆக விற்பனை செய்யப்பட்ட 50kg சீமெந்துப் பொதிகள், கட்டுப்பாட்டு விலை நீக்கத்தைத் தொடர்ந்து ரூ. 1,275 ஆக ரூ. 177 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் சீமெந்து வகைகளின் 50kg மூட்டையின் விலை, உள்நாட்டு சீமெந்து விலையை விட ரூ. 100 அதிகமாக, ரூ. 1,475 இற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...