நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

வெளிநாடு சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

கடந்த டிசம்பர் 15ஆம் திகதி தனது தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK650 எனும் விமானத்தில் இன்று அதிகாலை 6.50 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்க இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா விமான நிலையத்திற்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்து பதில் நிதி அமைச்சராக, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...