இலங்கையில் இதுவரை 45 Omicron தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் இதுவரை 45 Omicron தொற்றாளர்கள் அடையாளம்-41 More Omicron COVID19 Cases Identified-So Far 45 Omicron Cases Identified in Sri Lanka

இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இதுவரை இலங்கையில் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

 

இலங்கையில் முதலாவது Omicron தொற்றாளராக, நவம்பர் 23 ஆம் திகதி நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் 3 Omicron தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...