Thursday, December 30, 2021 - 1:48pm
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை ஜனவரி 03 - 30 வரை மூடத் தீர்மானித்துள்ளதாக, எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வதில் உள்ள அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் மிக விரைவில் அதன் இயக்கத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால், சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டதோடு, அது மீண்டும் டிசம்பர் 07ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment