பால் மா விலைகள் மீண்டும் அதிகரிப்பு: 400g ரூ. 540; 1kg ரூ. 1,345

பால் மா விலைகள் மீண்டும் அதிகரிப்பு: 400g ரூ. 540; 1kg ரூ. 1,345-Imported Milk Powder Prices Increased

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

- 400 கிராம் ரூ. 60 இனாலும்
- 1 கிலோகிராம் ரூ. 150 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய விலைகள்

  • 400g - ரூ. 540
  • 1kg - ரூ. 1,345

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்புக்கமைய, தற்போது 400 கிராம் பால் மா பொதி ரூ. 480 ஆகவும், 1 கிலோ கிராம் பால் மா பொதி ரூ. 1,195 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ஒரு சில உள்ளூர் பால் மா நிறுவனங்கள் ஏற்கனவே தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள விலைக்கே பால் மாக்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக ஏற்பட்டுள்ள டொலர் விலை அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யும் சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக, அதனையொட்டிய அனைத்துப் பொருட்களினதும் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...