பிரதமர் மஹிந்த ஒருபோதும் தனது பதவியிலிருந்து விலகமாட்டார்

மக்கள் அதனை எதிர்பார்க்கவுமில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாக முகநூல்களில் வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென புத்தசாசன அமைச்சின் முன்னாள் ஆலோசகர் கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்தார்.

நாட்டு மக்களினதும் மதத் தலைவர்களினதும் பூரண ஒத்துழைப்பு அவருக்கு உண்டென தெரிவித்த தேரர், அவ்வாறு பிரதமர் தமது பதவியை இராஜினாமாச் செய்ய ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

புத்தசாசன கலாசார சமய அலுவல்கள்  அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

சில முகநூல்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகப் போவதாகவும் தற்போதைய நிதி அமைச்சர் பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கௌரவத்தைப்பெற்ற தலைவர். முப்பது வருட காலம் நாட்டில் தொடர்ந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை ஒன்றிணைத்து மக்களை சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்தவர் என்றும் சிறந்த உடல் நிலையுடன் அவர் தற்போது உள்ளார் என்றார்.

நாட்டின் முக்கியமாக நடவடிக்கைகளை எவ்வித தங்குதடையும் இன்றி அவர் மேற்கொண்டு வருகிறார். அவரால் தொடர்ந்தும் அப்பதவியை சிறப்பாக முன்னெடுக்க முடியும். சில அடிப்படைவாதக் குழுக்களும், தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக செயற்படும் சில சக்திகளும் இத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புஅதுவல்ல எனவும் தெரிவித்த தேரர்,

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் முன்னர் பொருளாதார அமைச்சராக பதவி வகித்து நாட்டில் பெரும் வேலைத்திட்டங்களை முனனெடுத்துள்ளார். குறிப்பாக வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி அவர் முக்கிய கவனம் செலுத்தியதை குறிப்பிட முடியும். தற்போதை அரசாங்கத்தின் நிதியமைச்சராக நாட்டின் இக்கட்டான இத்தகைய ஒரு காலகட்டத்திலும் சிறந்த வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்து செயற்பட்டு வருகின்றார். அதன் மூலமான திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவரால்முடியும் என்றும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...